“நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள்.
என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.”
கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தைத் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை தேடுவதற்கான புலன் விசாரணை நடந்து வருகிறது.
“அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஏதாவது எதிர்வினை வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே. அதன் மூலம் ஹைதரபாத் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் அரசு அமைப்புகளின் முன் முடிவை வெளிப்படுத்தினார்.
2007ம் ஆண்டு ஹைதரபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பைப் பற்றி விசாரணை நடத்திய அதே ஹைதராபாத் போலீஸ் இப்போதும் விசாரணை நடத்துகிறது. மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லீம் பகுதிகளில் ரெய்டு நடத்தி, பல முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்தது போலீஸ். அவர்கள் தனியார் பண்ணை வீடுகளில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் ஆயுதங்கள், வெடிமருந்து, ஜிகாதி பிரசுரங்கள், செல்போன் பதிவுகள், மடிக்கணினிகள், பயங்கரவாத பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு போய் வந்த விபரங்கள் இவற்றை கைப்பற்றியதாக போலீஸ் சொன்னது.
அவை அனைத்தும் பொய் என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளன.
இப்போது தில்சுக் நகர் குண்டு வெடிப்புக்குப் பிறகும் முகமது ரயீசுதீன், முகமது அஸ்மத், அப்துல் ரஹீம், அப்துல் கரீம் என்ற அதே இளைஞர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. மெக்கா மசூதி வழக்கில் நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டதோடு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தவிர எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசால் தர முடியவில்லை என்று குறிப்பிட்டது. அந்த வாக்குமூலங்கள் கொடூரமான சித்திரவதையின் மூலம் பெறப்பட்டிருந்தன.
2007 மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக போலி வழக்குகளை உருவாக்கிய போலீஸ் அதிகாரிகள் இது வரை தண்டிக்கப்படவில்லை. சென்ற முறை உண்மையான விசாரணைக்கு தடையாக இருந்த இந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் தில்சுக் நகர் குண்டு வெடிப்பு பற்றிய விசாரணை நியாயமாக நடைபெற முடியும்.
இதற்கிடையில் ஹைதராபாத் பத்திரிகைகள் பெயர் குறிப்பிடாத போலீஸ்காரர்களை மேற்கோள் காட்டி குண்டு வெடிப்பில் முஸ்லீம்களின் தொடர்பு பற்றி வதந்திகளிலும் ஊகங்களையும் பரப்பி வருகின்றன.
2012 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு போலீசின் குற்றவியல் பிரிவு இதே ஹைதராபாத் போலீஸ் உதவியுடன் 14 இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று கைது செய்தது. அவர்களில் ஒருவரான முதில்-உர்-ரஹ்மான் சித்திக்கி என்ற டெக்கான் ஹெரால்ட் நிருபர் கடந்த 25ம் தேதி பெங்களூரின் பார்ப்பன அக்ரஹாரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
26 வயதான சித்திக்கி, ‘போலீஸ் முஸ்லீம்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான பாகுபாட்டை கடைப்பிடிக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். “நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள். ஊடகங்களும் போலீசும் முஸ்லீம்கள் பற்றிய பொதுப்புத்தியுடன் நடந்த கொள்கின்றன. இது எனக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.” என்றார் அவர்.
‘சித்திக்கியும் அவருடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களும் முக்கியமான இந்துத்துவா தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லத் திட்டமிட்டதாக’ குற்றம் சாட்டப்பட்டனர். சித்திக்கியின் சார்பில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று போராடியதைத் தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கபட்டிருக்கிறார். மற்ற இளைஞர்களுக்கு அப்படிப்பட்ட ஆதரவும் வாய்ப்பும் கிடைக்காமல் இன்னும் சிறையில் உள்ளனர்.
“பெங்களூரு போலீசையும் பத்திரிகைகளையும் பொறுத்த வரை நான்தான் சதித்திட்டத்தின் தலைவன். நான்தான் தலைவன் என்றால் மற்றவர்கள் ஏன் இன்னமும் சிறையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சித்திக்கி.
சித்திக்கியும் மற்ற 14 பேரும் கைது செய்யப்பட்ட போது போலீஸ் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றவில்லை; அவரது குடும்பத்தினருக்கு கைது குறித்து தகவல் சொல்லவில்லை; எதற்காக கைது செய்கிறார்கள் என்ற காரணத்தை சொல்லவில்லை. 30 -40 வெள்ளை தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்; அவற்றுள் ஒன்றில் முன் தேதியிட்ட போலி கைது அறிவிப்பு தயாரிக்கப்பட்டது.
சித்திக்கியுடன் விடுவிக்கப்பட்ட 28 வயதான நல்பாண்ட் ஒரு தனியார் நிறுவனத்தின் டெக்னிஷியனாக வேலை செய்பவர். “நேற்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. நான் இயல்பு நிலைக்கு திரும்புவேனா என்று தெரியவில்லை. கடவுளின் கருணை இருந்தால் நான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்” என்றார்.
“போலீஸ் கைது செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை முஸ்லீம் குல்லாய் அணியச் செய்து வீட்டை விட்டு வெளியில் வரச் செய்தார்கள்” என்கிறார் அவர்.
போலீஸ் துறைகளிலும் புலனாய்வு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்பான்மை எந்த ஒரு வன்முறை சம்பவத்துக்கும் முஸ்லீம் இளைஞர்களை குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்து துன்புறுத்துவதையும், சித்திரவதை செய்வதையும் வழக்கமாக்கியிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத சம்பவங்களில் ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்து துன்புறுத்தப்பட்டு பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவை இந்து அமைப்புகளின் பயங்கரவாதம் என்று செயல் என்று நிரூபணமாகியிருக்கின்றன.
அஜ்மீர் தர்க்காவில் அக்டோபர் 11, 2007ல் குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர்.இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.
மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது. இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர்.சிமி அமைப்பைச் சேர்ந்த சல்மான் பார்சி, பரூக் இக்பால் மக்தூமி, ராயிஸ் அகமது, நூருல் ஹூடா சம்சுதோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஜாகித் அந்த நாளன்று மாலேகானிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். ஷபீர் மசியுல்லா குண்டு வெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே போலீஸ் காவலில் இருந்தார். நேரடி சாட்சியங்கள் கொடுத்த தகவல்களின் படி குண்டு வைத்தவர்கள் தாடி இல்லாதவர்கள், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தாடி வைத்திருப்பவர்கள். 2008ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் இந்து பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாகிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன.பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாகரன் மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டர் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, ‘மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாக’ புரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத் போலீஸ் ஹூஜி உறுப்பினர்களை கைது செய்து வைத்திருந்ததால் இந்த விபரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது.
பிப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.ஆரம்பத்தில் எல்-இ-டியும் ஜே-இ-எம்மும் குற்றம் சாட்டப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மத் அலியும் உண்டு.ஆனால், தடயங்கள் வலது சாரி இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சுட்டிக் காட்டின. மூன்று மாதங்களுக்குப் பிறகு மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.
ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர். ஜோதா அக்பர் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்த குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 2006ல் நந்தாதில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர். இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன. நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
2002-03ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா தொண்டர்கள் ராம்நாரயன் கல்சங்கரா, மற்றும் சுனில் ஜோஷியுடன் தொடர்புடையவை என்று தெரிந்தன.
குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றால் சினிமா கதைகளில் மட்டுமல்ல நாட்டின் போலீஸ் அமைப்புகளுக்கும் உடனே முசுலீம் இளைஞர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். இந்த நினைவு பலநூறு அப்பாவி முசுலீம் இளைஞர்களை துன்புறுத்தி வருடக்கணக்கில் சிறையில் அடைப்பது என்று ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்துகிறது. இந்தியாவின் அதிகார அமைப்புகள் அனைத்தும் இந்துமயமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? உண்மையில் இதுதான் குண்டு வெடிப்புகளை விட ஆபத்தான பயங்கரவாதம்!


sdpi
பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டி, வைகோ நான்கு கட்ட நடைபயணத்தை அறிவித்து முதல்கட்ட நடைபயணத்தை கடந்த மாதம் நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 400 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்திலிருந்து 2ம் கட்ட நடைபயணத்தை துவக்கிய வைகோ, 11 நாட்கள் 250 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு 28 ம் தேதி மறைமலை நகரில் நிறைவு செய்தார்.
இதையொட்டி மறைமலை நகரில் நடைப்பயண நிறைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் மற்றும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா அவர்களும் கலந்து

Read more about வை.கோ வின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம் – எஸ்.டி.பிஐ.பங்கேற்பு!

படம்  —  Posted: மார்ச் 2, 2013 in POPULAR FRONT


வீடியோ  —  Posted: பிப்ரவரி 23, 2013 in POPULAR FRONT


ரெயில்வே துறையால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதை கண்டித்து வரும் 22 ம் தேதி சென்னையில் இரயில் மறியல் போராட்டம் நடைபெரும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

மாவட்ட மாநாடுகள் மற்றும் மாநில ,தேசிய நிர்வாகிகள் தேர்தல்:

எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)கட்சியின் வருகிற 2 வருடங்களுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல், கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வருகிறது.இந்த மாதம் இறுதிக்குள் முழுமையாக நடந்து முடிந்து விடும் .தொடர்ந்து அடுத்த மாதம் 9,10 ஆகிய தேதிகளில் திருச்சியில் கட்சியின் மாநில பொது குழு நடைபெற உள்ளது .அதில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்பட உள்ளனர்.தொடர்ந்து மார்ச் 30 இல் கட்சியின் தேசிய பொது குழு கோவையில் நடைபெற உள்ளது.இதில் கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில்எஸ்.டி.பி.ஐ கட்சி மிக வேகமாக, வீரியமாக வளர்ந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த பல்வேறு தரப்பினரும், பலவேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியில் ஆர்வத்துடன் இணைத்து வருகின்றனர். கட்சியின் வளர்ச்சியினுடைய ஒரு பகுதியாக வரும் நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.நெல்லையிலும், மதுரையிலும் மாநாடு நடந்து முடிந்துள்ளது. இராமநாதபுரத்தில் வருகிற 23 ஆம் தேதியும் , திருச்சியில் அடுத்த மாதம் 10ம் தேதியும் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு வரும் மார்ச் 31ம் தேதி வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக இதில் கலந்து கொள்ள உள்ளனர் .பூரண மதுவிலக்கை அமல்படுத்து, தமிழக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 7 சதவீதமாக உயர்த்திடு, சிறு குறு தொழில்களை பாதுகாத்திடு,7 வருடம் சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்திடு, லஞ்சம் ஊழல்களுக்கு எதிராக அணிதிரள்வோம் ஆகிய முழக்கங்களை முன்வைத்து இந்த மாநாடு நடைபெற உள்ளது .அனைத்து தரப்பினரும் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அப்சல் குரு பிரச்னையை திசை திருப்பவே நான்கு தமிழர்களின் கருணை மனு நிராகரிப்பு:

அப்சல் குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையும், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட விதமும் அநியாயமானது.பாரதிய ஜனதாவை எதிர் கொள்ளவே இந்த தண்டனை நிறைவேற்றம் நடைபெற்று உள்ளது . இதனால் ஏற்பட்டுள்ள விவாதங்களை மறைக்கவே நான்கு தமிழர்களின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அரசியல் காரணங்களுக்காகவே இந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தூக்குத் தண்டனையை அரசியலுக்காக பயன்படுத்துகிறது.

26 ல் சேலம் விவசாயிகளின் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்பு:

கொச்சி முதல் பெங்களூர் வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்களின் நிலங்கள் கைவசப்படுத்துவதாகவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் பதிக்கப்படும் குழாய்களுக்கான பாதுகாப்பை நில உரிமையாளர்கள் மீது சுமத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. விவசாயிகளை அச்சுறுத்துவதையும் உரிய நிவாரணம் இன்றி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.எனவே விவசாயிகளின் நலனுக்காக நடைபெறும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது.வரும் 26 ம் தேதி சேலத்தில் நடைபெறும் கெயில் நிறுவன முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்கிறது.

ரயில்வே துறை தமிழகத்தை புறக்கணிப்பதை கண்டித்து பிப்ரவரி -22 இல் இரயில் மறியல்:

தொடர்ந்து இரயில்வே துறை தமிழகத்தை புறக்கணித்து வருகிறது . தமிழக திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை .இதை கண்டித்தும் ,வரும் இரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய இரயில்களுக்கான அறிவிப்பையும் , அதிக நிதி ஒதுக்கீட்டையும் தமிழகத்திற்கு அளிக்க வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வரும் 22 ம் தேதி சென்னையில் எனது தலைமையிலும் , நெல்லையில் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் தலைமையிலும் இரயில் மறியல் போராட்டம் நடைபெரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாநிலத் துணை தலைவர் பிலால் ஹாஜியார் ,மாநில செயலாளர் V.M அபுதாகிர்,மாநில செயற்குழு உறுப்பினர் நிஜாம் முகைதீன் ,கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா,துணைத்தலைவர் அன்சர்,பொதுச்செயலாளர் அப்துல் காதர்,SDTU மாநில செயலாளர் அப்துல் கரீம், SDTU மாவட்ட தலைவர் அஸ்ரப் ஆகியோர் உடன் இருந்தனர் .


அரசியல் பாதை முட்களாலானது என்று வேலூர் மக்களவைத் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகருமான அப்துல்ரஹ்மான் எம்.பி தெரிவித்தார்.

மூன்றுநாள் பயணமாக சவூதி அரேபியாவுக்கு வருகை புரிந்துள்ள அப்துல்ரஹ்மான் எம்.பி தனது உம்ரா புனித பயணத்தை முடித்துக்கொண்டு ரியாத் வந்து தங்கியிருந்தார். அச்சமயம் அவரை நட்பார்ந்த முறையில் சந்தித்த நமது செய்தியாளரிடம் இவ்விதம் தெரிவித்தார்.

“கலை என்ற பெயரால் யாருடைய மத உணர்வுகளும் புண்படுத்தப் படக் கூடாது” என்றார் அப்துல் ரஹ்மான் எம்.பி.

விஸ்வரூபம் எடுத்த முஸ்லிம்களின் கூட்டமைப்புப் போராட்டம் பற்றி பேசுகையில் “மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகளையும், படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மற்ற அமைப்புகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஒன்று படவே செய்கிறது. ஆனால், அதற்கான போராட்ட வடிவங்களில் தனக்கே உரிய பொறுப்பான அணுகுமுறையால் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறது” என்றார் முஸ்லிம் லீக் எம்.பி

“சமுதாய நோக்கிலும், அரசியல் நோக்கிலும் ஒவ்வொரு அமைப்பினரும் தத்தம் வழிமுறைகளைக் கொண்டு சேவை செய்வது பாராட்டிற்குரியதே” என்ற நாடாளுமன்ற உறுப்பினர் “சில பாதைகளில் சிவப்புக் கம்பளங்கள்; சிலவற்றிலோ பாலை மணல், ஆனால் நேர்மையும் ஒழுக்கமும் நிரம்பியவர்களுக்கு அரசியல் பாதை என்பது முட்கள் மட்டுமே பரப்பபட்ட பாதையாகும்” என்றார்.

சந்திப்பின் போது தஃபர்ரஜ்-ரியாத் குழும நிர்வாகிகளும் உடனிருந்தனர்.


நெல்லை: நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் போராட்டம் நடத்திய அணு உலை எதிர்ப்பாளர்கள், பிரெஞ்சு தேசியக் கொடியை தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்டே இந்தியாவுக்கு வருவதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெரும் திரளான ஆண்களும், பெண்களும் இடிந்தகரையில் திரண்டு முதலில் பேரணி நடத்தினர். கூடங்குளம் அணு உலையை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் இந்தப் போராட்டம் நடந்தது. பேரணியின் நிறைவில் பிரெஞ்சு தேசியக் கொடி தீவைத்து எரிக்கப்பட்டது.

இதுகுறித்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் ஜைதாப்ப்பூரில் அணு மின் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும், பிரான்ஸும் கையெழுத்திடவுள்ளன. இதற்காகவே ஹோலன்டே வருகிறார். இதைக் கண்டித்தே தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் அதிபரான பின்னர் முதல் முறையாக ஹோலன்டே இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்ககது. 2 நாட்கள் அவர் இந்தியாவில் தங்கியிருப்பார்.


வாஷிங்டன்: இன்று இரவு 2012 DA14 என்ற விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லப் போகிறது.

பூமிக்கும் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கும் இடையே இந்த விண்கல் கடந்து செல்லப் போகிறது.

பூமியிலிருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் தான் நமது தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களும் வானிலை ஆய்வு செயற்கைக் கோள்களும் சுற்றிக் கொண்டுள்ளன. இந்த 35,000 கி.மீ. உயர வட்டப் பாதைக்கு geosynchronous orbit என்று பெயர்.


மாஸ்கோ: மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இன்று மிகப் பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

எரி நட்சத்திரத்திரம் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்பின்போது சில வீடுகளின் கூரைகள் நொறுங்கின, பல வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்துவிட்டன.

இந்த அதிர்வால் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரை நொறுங்கியது. இதில் சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் மீது விழ இருந்த பெரிய எரிகல்லை அந் நாட்டின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கியதில் அது சிதறி விழுந்தாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் எரி நட்சத்திரத்தின் துகள்கள் நிலப்பரப்பில் எங்கும் விழவில்லை என்றும் கூறப்படுகிறது.


sdpi

திருச்சி அரியமங்கலம் 29 வார்டு தீடீர் நகர்,அண்ணா நகர்ஆகிய பகுதிகளுக்கு நிரந்தர சாலை வசதி கேட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று (12.02.2013)நடைபெற்றது .

மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார் .இதில் அப்பகுதி பொது மக்களும், எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.

படம்  —  Posted: பிப்ரவரி 13, 2013 in SDPI


vinodhini
சென்னை: ஒருதலைக்காதலால் ஆசிட் வீச்சுக்குள்ளான காரைக்கால் சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் ஜெயபாலின் மகள் வினோதினி. இவர் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்தவன் கட்டிடத் தொழிலாளி சுரேஷ். கடந்த தீபாவளிக்கு வினோதினி ஊருக்கு சென்ற போது சுரேஸ் ஆசிட் ஊற்றி வினோதியின் முகத்தை சிதைத்து விட்டான். அவன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கான். இதில் கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் கடந்த சில மாதங்களாக வினோதினி சிகிச்சை பெற்று வந்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோதினி உயிரிழந்தார்.

படம்  —  Posted: பிப்ரவரி 12, 2013 in POPULAR FRONT